Categories
தேசிய செய்திகள்

சாகர் ராணா தன்கட்டை சரமாரியாக தாக்கிய சுஷில் குமார்…. வெளியான வீடியோ…!!

சாகர் ராணா தான்கட்டை மல்யுத்த வீரர் சுஷில் குமார் அடிக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மல்யுத்த வீரர் சுஷில் குமார் என்பவருக்கும், சாகர் ராணா தான்கட் என்பவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இருவரும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். சுசில் குமாரும் அவரது நண்பரும் தான் கட்டை கடுமையாக தாக்கினர். இதில் மோசமாக காயமடைந்து கீழே விழுந்த தான் கட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து தான்கட் உயிரிழந்ததை கொலை வழக்காக மாற்றி போலீசார் சுஷில் குமாரை தீவிரமாக தேடிவந்தனர்.

அவர் தலைமறைவாகி இருந்ததை அடுத்து ஹரியானா, உத்தரகாண்ட் என்ற பல்வேறு மாநிலங்களில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடப்பட்டு வந்தது. அதுமட்டுமில்லாமல் அவரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு எனவும் டெல்லி போலீசார் தெரிவித்திருந்தார். பல தேடுதலுக்கு பின்னர் அவர் டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு காவல்துறை அதிகாரிகளால் கைது கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரை நீதிமன்ற காவலில் 30 நிமிடம் விசாரணை செய்தனர். அப்போது சாகர் ராணா தான்கட்டை அடிப்பதை எனது நண்பன் பிரான்ஸிடம் மொபைலில் வீடியோவாக எடுக்க சொன்னேன். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரல் ஆக்கினால் யாரும் என்னை எதிர்த்து நிற்க மாட்டார்கள் என்று எண்ணியே இதை செய்தேன் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |