ஜெர்மனி, நமீபியாவில் இனப்படுகொலைகள் செய்ததை ஒப்புக்கொண்டு, நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது.
ஜெர்மனியின் காலனித்துவவாதிகள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், நமீபியாவின் காலனித்துவ கால ஆக்கிரமைப்பு சமயத்தில், Herero மற்றும் Nama மக்கள் பலரைக் கொன்றனர். இந்நிலையில் நமீபியாவில் இனப்படுகொலைகள் செய்யப்பட்டதை, ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas ஒத்துக்கொண்டுள்ளார்.
மேலும் நமீபியாவிடமும், பாதிப்படைந்த சந்ததிகளிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மன், 1.1 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான மதிப்புடைய திட்டத்தின் வாயிலாக நமீபியா நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திட்டத்தினால் சுமார் 30 வருடங்களுக்கும் மேல் நமீபியாவில் உள்கட்டமைப்பு, சுகாதார, பயிற்சி திட்டங்களுக்கு செலவளிப்பதன் மூலம் பாதிப்படைந்த சமூகத்திற்கு பலனளிக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் ஜெர்மனியின் இந்த ஒப்பந்தத்தை நமீபியாவின் சில பாரம்பரிய இனக்குழுவின் தலைவர்கள், அங்கீகரிக்கவில்லை என்று அரசுக்குரிய செய்தித்தாளில் கூறப்பட்டுள்ளது.