Categories
சினிமா தமிழ் சினிமா

செம கியூட்… நடிகை மாளவிகா சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை மாளவிகா மோகனன் தனது சிறுவயது புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் D43 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் நடிகை மாளவிகா அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை மாளவிகா தனது சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |