Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’?… தீயாய் பரவும் தகவல்…!!!

இயக்குனர் கார்த்திக் நரேனின் நரகாசூரன் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதையடுத்து இவர் இயக்கத்தில் நரகாசூரன் திரைப்படம் உருவானது. அரவிந்த்சாமி, ஸ்ரேயா, ஆத்மிகா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஆனால் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இந்த படம் ரிலீஸாகாமல் இருந்தது. இதை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாபியா திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அருண்விஜய், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Naragasooran trailer: This Karthick Naren film is about myths and secrets | Hindustan Times

தற்போது நடிகர் தனுஷின் 43-வது படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் கார்த்திக் நரேனின் நரகாசூரன் திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |