நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் உயிரிழப்புகள் அதிகரித்து வந்ததன் காரணமாக மே-31 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கினால் டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது என்பதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கூலி தொழிலாளர்களை கருத்தில் கொண்டு வரும் திங்கள் முதல் கட்டுமான பணிகள், தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு மீண்டும் உயர்ந்ததால் தளர்வுகள் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.