ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அண்ணனாக ரஜினிகாந்த் தங்கையாக கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷுடன், நயன்தாரா, மீனா, குஷ்பு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவா இயக்கியுள்ளார். ஏற்கனவே அண்ணன் தங்கை பாசத்தை கருவாகக் கொண்டு தர்மயுத்தம் படத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். இதைத்தொடர்ந்து தற்போது பல வருடங்கள் கழித்து அண்ணன் தங்கை பாச கதையில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.