Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் ஜூன் மாதம் முதல்… 13 வகை மளிகை பொருட்கள்…!!

தமிழக ரேஷன் கடைகளில் ஜூன் மாதம் முதல் 13 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் ஊரடங்கு காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழக ரேஷன் கடைகளில் ஜூன் மாதம் முதல் 13 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

13 வகை பொருட்கள்:

கோதுமை மாவு – ஒரு கிலோ, உப்பு – ஒரு கிலோ, சர்க்கரை – 500 கிராம், உளுந்தம் பருப்பு – 500 கிராம், கடுகு – 100 கிராம், மஞ்சள் தூள் – 100 கிராம், மிளகாய் தூள் – 100 கிராம், குளியல் சோப் – ஒன்று, துணி சோப்பு – ஒன்று, டீ தூள் – 250 கிராம், மற்றும் சீரகம் – 100 கிராம்.

Categories

Tech |