ஊரடங்கு காரணமாக கருத்தடை சாதனம் விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றன. தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஊரடங்கில் அதிக அளவில் குழந்தைகள் பிறந்ததாக வாய்ப்புகள் தெரிவித்திருந்தது. தமிழகத்தில் அதுவும் சென்னையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் 7,030 குழந்தைகள் பிறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து இந்த வருடம் ஆரம்பம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெறும் 4,094 குழந்தைகள் பிறப்பு மட்டுமே பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020 விட இந்த வருடம் 42% குழந்தை பிறப்பு சரிந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஊரடங்கால் மக்கள் வீட்டில் முடங்கியுள்ள நிலையில், 15% கருத்தடை சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.