தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் எந்தத் தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம், பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஞாயிறு அன்று கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.