தமிழகத்தில் நீதிமன்றங்களில் ஜூன் 1 முதல் 11 வரை 9 நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மிகமுக்கிய வழக்காக தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க மட்டுமே சிறப்பு அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுரையில் ஜூன் 1 முதல் 7 வரை, 8 முதல் 11 வரை தலா 7 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள். அனைத்து நாட்களிலும் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.