நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் ஒரு சிலர் உயிரிழந்துள்ளனர். சினிமாத்துறையில் அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்படுவதால் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் ஏற்கனவே அனுமத்திக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இவருடைய மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.