Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட் ஞாயிறு அன்று செயல்பட அனுமதி…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. பொது மக்களின் தேவைக்காக நடமாடும் காய்கறி வண்டிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் பொது மக்களின் அத்தியாவசிய தேவைக்கு சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வியாபாரிகள் பலரும் கோரிக்கை விடுத்ததை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்பேடு மார்க்கெட் எப்போதும் வழக்கம்போல செயல்படும் என்று அங்கன்வாடி நிர்வாக குழு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |