Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு….. அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பு பழைய எழுத்து தேர்வு அடிப்படையிலேயே இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஜூன் 10-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறாமல் வழக்கம் போலவே மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |