Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல வில்லன் நடிகருக்கு இதய அறுவை சிகிச்சை…. வெற்றிகரமாக முடிந்ததாக தகவல்….!!!

பிரபல வில்லன் நடிகருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பிரபல நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப். வில்லன் நடிகர் என போற்றப்படும் அனுராக் காஷ்யப்பிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பரிசோதனையில் அவருக்கு இதயத்திற்கு செல்லும் குழாய்களில் அடைப்புகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து அதற்கான அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தற்போது அவரது உடம்பில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |