சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திக்கு பிரபல நடிகை கௌரி கிஷன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளிடம் பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து 40ற்கும் மேற்பட்ட மாணவிகள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது புகார் அளித்து வருகின்றனர்.
இதற்கிடையில் இது குறித்து பல திரை பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 96 படத்தின் மூலம் பிரபலமான நடிகை கௌரி கிஷன் தான் பள்ளிப்பருவ அனுபவங்களை கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, தான் அடையாறு பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர்கள் சிலர் மாணவ, மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து திட்டுவது, மிரட்டுவது, ஆதாரமில்லாத குற்றச்சாட்டு ஆகியற்றை செய்துள்ளார்கள்.
இப்படி அவர் தனது நண்பர்களின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்ததன் மூலம் கௌரி கிஷனும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு கௌரி கிஷன், எனக்கு பாலியல் ரீதியான எந்த ஒரு துன்புறுத்தலும் நடக்கவில்லை. இதனை இத்தோடு நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.