மரணபயம் மிகவும் கொடுமையானது என்று கோமாளி பட நடிகை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வரும் இவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. இருப்பினும் சுவை மற்றும் வாசனையை என்னால் உணர முடியவில்லை. சோர்வாக இருக்கிறேன்.
நான் அதிகமாக நேசிப்பவர்கள் இழந்து விடுவேனோ என்ற பயம் எனக்குள் இருக்கிறது. அதுவும் மரணபயம் மிகவும் கொடுமையானது. எனது அம்மாவை கட்டிப் பிடிக்க முடியவில்லை. தனி அறையில் அடைபட்டு இருக்கிறேன். நம்மில் பலர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தவறுகிறோம். ஆகையால் உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவு பழக்கம் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.