நாகையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஒரு கையில் இரும்பு சங்கிலியால் கட்டி கொண்ட நிலையில் மற்றொரு கையால் 10 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தி உலக சாதனை படைத்துள்ளார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பீச்சங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர். சபரிநாதன் இரண்டாமாண்டு மாணவரான இவர் சிறுவயது முதலே நீச்சல் மீதான ஆர்வத்தால் பயிற்றுனர் மூலம் சிறப்பு பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு கைகால்களை இரும்புச் சங்கிலியால் கட்டி நாகூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி 20 நிமிடம் 48 நொடிகளில் கடலில் நீந்தி உலக சாதனை படைத்தார்.
தற்பொழுது வேளாங்கண்ணியில் இருந்து ஒரு கிலோ எடையுள்ள இரும்பு சங்கிலியால் ஒரு கையை கட்டி பூட்டு போட்டு கொண்டு 10 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தி வேர்ல்ட் டைம் ரெக்கார்ட் என்று மேலும் ஒரு உலக சாதனை படைத்துள்ளார். வேளாங்கண்ணி கடற்கரையில் சபரிநாதன் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் தொடங்கி வைத்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய அவர் காலை 11 மணி 17 நிமிடங்கள் இலங்கை வந்தடைந்தார். படகில் அவருடன் கண்காணித்தபடி வந்த அதிகாரிகள் மூன்று மணி 14 நிமிடங்கள் நீந்தி சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.