பூம் மாடுகளை வைத்திருக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு போலீஸ் சூப்பிரண்டு அவருடைய சொந்த செலவில் உதவியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பூம் பூம் மாடுகளை வைத்திருக்கும் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். எனவே தற்போது முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் அவர்கள் வெளியில் செல்ல முடியாமல் தனது வாழ்வாதாரம் இழந்து உணவின்றி தவித்து வருகின்றனர்.
இதை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தனது சொந்த செலவில் பூம் பூம் மாடுகளை வைத்து தொழில் செய்து வரும் குடும்பத்தினருக்கு தேவையான காய்கறிகள், அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார். அப்போது மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி என்பவரும் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருடன் இருந்துள்ளார்.