5ஜி தொழில்நுட்பத்தினால் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும். வீடியோக்களை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்க்க முடியும். இந்நிலையில் 5 ஜி இணைய வசதியை உருவாக்கவும், சோதனைக்கான அலைக்கற்றையை மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளது.
இவற்றைக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5ஜி சோதனைகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் 5ஜி சோதனைகள் ஆறு மாத காலம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.