தமிழகத்தில் அறிவிக்கப்படும் வேலை வாய்ப்புகளில் தமிழர்களை விட வட மாநிலத்தவர்கள் தான் அதிகமாக பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறு வடமாநிலத்தவர்கள் அரசு பணியில் ஆமர்த்தப்படுவதால் தமிழர்க இளைஞர்களுக்கு வேலை இல்லாத சூழல் உருவாகி வருகிறது. எனவே தமிழக அரசு பணியில் வடமாநிலத்தவர்களை அமர்த்தக் கூடாது என்று பல காலமாக கோரிக்கை எழுந்து வந்தது.
இந்நிலையில் சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள 510 அப்ரண்டிஸ் பணிக்கு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் தான் இனி விண்ணப்பிக்க முடியும் வடமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது என்பது உறுதியாகியுள்ளது.