ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதி சுற்றில் ஏற்பட்ட முடிவு மாற்றத்தால் ,இந்திய வீராங்கனையான சாக்ஷி வெண்கலப்பதக்கத்துடன் திரும்பினார்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 54 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை சாக்ஷி , கஜகஸ்தான் வீராங்கனையான டினா ஜோலாமானுடன் மோதி , 3-2 என்ற கணக்கில் சாக்ஷி வெற்றி பெற்றார் ,என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முடிவில் கஜகஸ்தான் அணி நிர்வாகம், மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அப்பீல் செய்திருந்தது.
இதனால் போட்டி நடந்த வீடியோ பதிவை கண்டு ஆய்வு செய்த நடுவர்கள், அரையிறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனையான டினா ஜோலாமான் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் போட்டியின் 3வது சுற்று, கஜகஸ்தான் வீராங்கனைக்கு சாதகமாக இருப்பதால் , போட்டியின் முடிவை நடுவர் மாற்றினார், என்று இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த இந்திய வீராங்கனை சாக்ஷி, வெண்கலப் பதக்கத்துடன் திரும்பினார்.