இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப பெயர்களை வைத்து வருகின்றனர். அந்தவகையில் கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கோவிட், கொரோனா என்று வித்தியாசமாக பெயர் வைத்து வந்தனர். இந்நிலையில் ஒடிசாவில் கடந்த வாரம் யாஷ் புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெருமளவில் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் பிறந்த குழந்தைகளில் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு யாஷ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் கடந்த வாரம் வீசிய யாஷ் புயலின்போது பிறந்த 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை சுமார் 165 குழந்தைகளுக்கு யாஷ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது.