Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டென அங்கு திரும்பியதால்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கோவையில் பரபரப்பு….!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவில்பாளையம் காளியண்ணன் புதூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேது விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேது விக்னேஷ் மற்றும் அவருடன் பணியாற்றும் கிருஷ்ணராஜ் மற்றும் சங்கர் நாராயணன் போன்றோர் இரவு வேலையை முடித்து விட்டு காரில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இதனை அடுத்து இவர்களின் கார் கோவில் பாளையத்தை தாண்டி இருக்கும் சேரன் நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது திடீரென அந்த லாரி கேரளா செல்வதற்காக வலதுபுறம் திரும்பியதால் சேது விக்னேஷ் எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறத்தில் மோதி விட்டார். இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்து விட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் கிருஷ்ணராஜ் மற்றும் சேது விக்னேஷ்  ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பின் படுகாயம் அடைந்த சங்கர் நாராயணனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |