விதிமுறைகளை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காய்கறி மற்றும் மளிகை கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அதிகாரிகள் ஒரு கடையின் ஷட்டர் பாதி அளவு திறக்கப்பட்டு பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். இதனையடுத்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக அதிகாரிகள் உடனடியாக அந்த கடையை பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்தால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.