மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டைப் பாளையம் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் உடனடியாக தனியார் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து சிகிச்சை பெற்று குணம் அடைந்து அனைவரும் வீடு திரும்பி விட்டனர். அப்போது திடீரென அந்த பெண்ணுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் குரும்பபாளையத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தனக்கு மறுபடி கொரோனா வந்துவிட்டதா என்ற அச்சத்தில் இருந்த பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.