கொரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 3 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல மாவட்டங்களில் தொற்றுகள் குறைந்து கொண்டு வருகின்றன.
தற்போது ஜூன் 7ஆம் தேதி முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரண தொகையாக ரூபாய் 3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு காப்பகம் அல்லது விருதுகளில் இல்லாது, உறவினர் பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 3000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.