கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் கிழக்குப் பகுதியில் செர்கிபே மாநிலத்தில் அரகாஜு நகரில் கொரோனா நோயாளிகளுக்கு என்று சிகிச்சை அளிப்பதற்காக நெஸ்டர் பைவா என்ற மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் 60 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இங்கு நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த அந்நாட்டு தீயணைப்பு படை குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்ததோடு நோயாளிகளை பத்திரமாக மீட்டு வேறு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் இந்த தீ விபத்தில் சிக்கி 4 நோயாளிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.