பிரிட்டன் இளவரசர் சார்லஸின் கைவிரல்கள் ஏன் வீங்கியிருக்கிறது? என்று இணையத்தளத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
பிரிட்டனில் தற்போது ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே இளவரசர் சார்லஸ் வணிக வளாகங்களை பார்வையிட, லண்டனிலுள்ள ஒரு பப்பிற்கு, மனைவி கமிலாவுடன் வந்திருக்கிறார். அப்போது அவர் டம்ளரில் சிறிது பீர் குடித்துவிட்டு அதை பத்திரிக்கையாளர்களிடம் காட்டியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்த பலரும், இளவரசரின் கைவிரல்கள் ஏன் வீங்கியிருக்கிறது? அவருக்கு என்ன ஆயிற்று? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் கூகுளில் அதற்கான காரணத்தை தேடி வருகிறார்கள்.
இதுமட்டுமல்லாமல், இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு சமயங்களில் உள்ள புகைப்படங்களிலும் இளவரசர் சார்லஸின் கை விரல்கள் வீங்கியிருக்கிறது. மேலும் கடந்த 2012ம் வருடத்தில் இளவரசர் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்ட போது மற்றும் 2019 ஆம் வருடத்தில் இந்திய நாட்டிற்கு சென்றபோதும் அவரின் கை விரல்கள் வீங்கிதான் இருக்கிறது.
அதாவது கை விரல்கள் வீங்குவதற்கு பல காரணங்கள் உள்ளது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும், உணவில் அதிக உப்பு சேர்ப்பதாலும் வீங்கும் என்றும் மருந்துகளின் பக்க விளைவுகள், இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பிரச்சினைகள் இருந்தால், அதன் அறிகுறியாக கைகள் வீங்கும் என்றும் NHS வலைத்தளத்தில் கூறப்பட்டிருக்கிறது.