Categories
தேசிய செய்திகள்

உயிரிழந்த தாயின் சடலம் முன்பு… நடந்த மகன் திருமணம்… கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!!

பெங்களூரு மாநிலத்தில் உயிரிழந்த தாயின் முன்பு மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் இஸ்மாயில் என்ற பகுதியை சேர்ந்த ரேணுகா என்பவர் தனது இரண்டாவது மகனான ராகேஷ் என்பவருக்கு திருமணம் செய்வதற்காக அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருந்தார். பின்னர் ராஜேஷுக்கு ஜூன் ஆறாம் தேதி நிச்சயதார்த்தம், அதே மாதம் 21ஆம் தேதி திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இதற்கிடையில் அவரது தாயார் ரேணுகாவுக்கு தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த ராகேஷ் தனது திருமணம் தாயார் முன்னிலையில் நடக்க வேண்டும் என்று இறந்த தாயின் உடல் முன் மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |