Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தலைநகர் டெல்லி…. நிம்மதி தரும் செய்தி….!!!

நாள் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் முதலில் உச்சத்தில் இருந்தால் கொரோனா பாதிப்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அது மக்களுக்குப் பெரும் நம்பிக்கை அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இன்று 956 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 14,24,646 ஆகவும், 2380பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குணமடைந்து ஒரு எண்ணிக்கை 13,87,538 ஆகவும், 122 பேர் உயிர் இழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,073 ஆகவும் அதிகரித்துள்ளது.

Categories

Tech |