இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தானின் தீவிரவாதத்திற்கு எதிராக போரிட முன்வர வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் தீவிரவாதம் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஐஎஸ் தீவிரவாதிகள் தலை ஓங்கியுள்ளதாக தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான முயற்சிகளை 7 ஆயிரம் மைல்கள் கடந்து இருக்கும் அமெரிக்கா மட்டுமே மேற்கொண்டு வருவதாகவும், குறுகிய காலத்தில் அங்கு அதிக அளவில் தீவிரவாதத்தை ஒழித்ததில் பெரும்பான்மையான பங்கு அமெரிக்காவிற்கு மட்டுமே உள்ளதென்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆப்கானிஸ்தானுக்கு அருகிலிருக்கும் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தீவிரவாதிகளை அழிக்க முன் வருவதில்லை என்று குற்றம் சாட்டிய அவர், தாங்கள் இன்னும் 19 ஆண்டுகளுக்கு ஆப்கானிஸ்தானுடன் போராடிக் கொண்டிருக்க முடியாது இந்தியா பாகிஸ்தான் ஈரான் ரஷ்யா துருக்கி உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.