Categories
மாநில செய்திகள்

“TNPSC தேர்வு” வெளியானது குரூப்-4க்கான ஹால்டிக்கெட்..!!

TNPSC  குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் போட்டித்தேர்வுக்கான எதிர்பார்ப்பு என்பது படித்த இளைஞர்களிடம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக டிஎன்பிஎஸ்சி சார்பில் தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்று தினந்தோறும் எதிர்பார்த்துக் காத்திருப்பர். அந்த வகையில் 6,493 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வில் விண்ணப்பிக்க  தேர்வு வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து லட்சக்கணக்கானோர் தேர்வு கட்டணம் செலுத்தி இதற்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் இதற்கான ஹால் டிக்கெட் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

Image result for tnpsc group 4 hall ticket

இதனை www.tnpscexam.net மற்றும் www.tnpscexam.in உள்ளிட்ட இணைய தளங்களுக்குச் சென்று விவரங்களைப் பெற்று பின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட்டை  பதிவிறக்கம் செய்ய முடியாதோர் தங்களது தேர்வு கட்டண ரசீதை நகலெடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்கான கால அவகாசம் 28ம் தேதி வரை அளிக்கப்பட்டு உள்ளது. 28 ஆம் தேதிக்கு பிறகு பெறப்படும் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |