உத்திரப்பிரதேச மாநிலத்தில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம், சமஸ்பூர் என்ற பகுதியை சேர்ந்த இளைஞனுக்கும் சுரபி என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடக்க இருந்தது. மணமேடைக்கு வந்த இருவரும் மாலையை மாற்றிக்கொண்டு திருமண சடங்குகளை செய்து முடித்தனர். பின்னர் தாலி கட்டும் போது மணமகள் மயங்கி விழுந்தார். உடனே மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்து பார்த்த போது மணமகள் மாரடைப்பால் உயிரிழந்த தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வேறு வழியின்றி மணமகளின் தங்கையை மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்தனர்.
இதையடுத்து இறந்த மகளை ஒரு அறையில் வைத்துவிட்டு, மற்றொரு அறையில் திருமணம் நடைபெற்றது. ஒரு அறையில் மகள் பிணமாக, ஒரு அறையில் மற்றொரு மகள் மாலையும் கழுத்துமாக இருந்த சம்பவம் பார்ப்போரை கண் கலங்க வைத்தது. அவரது பெற்றோர்கள் மகள் இறந்த துக்கத்தை நினைத்து அழுவதா, மற்றொரு மகளுக்கு திருமணம் நடைபெற்று விட்டது என்ற சந்தோஷத்தில் இருப்பதா என தெரியாமல் கதறி அழுதனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.