வடகொரியாவின் எல்லையோர மாகாணங்களில் இருக்கும் புறாக்கள் மற்றும் பூனைகள் அனைத்தும் கொல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், பக்கத்து நாடான சீனாவிலிருந்து கொரோனாவை புறாக்கள் தான் தங்கள் நாட்டில் பரப்புவதாக கருதுகிறாராம். எனவே எல்லையோர மாகாணங்களில் கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்கிறது. அதன்படி Sinuiju மற்றும் Hyesan ஆகிய மாகாணங்களில் இருக்கும் புறாக்கள் மற்றும் பூனைகள் அனைத்தையும் கொல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் Hyesan மாகாணத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், ரகசியமாக வளர்த்து வந்த பூனை, விசாரணை அதிகாரிகளின் கண்ணில் பட்டுள்ளது. உடனடியாக அந்த குடும்பத்தினர் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு சுமார் 20 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரை, கொல்லப்பட்ட புறாக்கள் மற்றும் பூனைகளின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. மேலும் இவைகளை கொல்வதற்காகவே சிறப்பு சோதனை படைகள் களமிறங்கியுள்ளது. எனவே சீனாவின் எல்லையில் இருக்கும் வடகொரிய மாகாணங்கள் பதற்றத்துடன் காணப்படுகிறது.