Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணன்… நடந்த கொடூர சம்பவம்… திருச்சியில் பரபரப்பு…!!

குடும்ப தகராறில் மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் ஆறுமுகம் என்ற மாநகராட்சி துப்புரவு பணியாளர் வசித்து வருகிறார். இவருக்கு துரைசாமி, ஐயப்பன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் துரைசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் வீட்டிலேயே திருமணமாகாமல் இருந்துள்ளார். மேலும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக ஐயப்பன் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த ஐயப்பன் தனது அண்ணன் துரைசாமியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த துரைசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீ ரங்கம்  காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஐயப்பனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |