Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் பழுதடைந்து நின்ற சரக்குக்கப்பல்.. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்..!!

எகிப்தின் சூயஸ் கால்வாயில், நேற்று சரக்குகப்பல் ஒன்று எஞ்சின் கோளாறால் பழுதடைந்து நின்றுள்ளது. 

எகிப்தின் சூயஸ் கால்வாயின் இடையில், எவர் கிவ்வன் கப்பல் கடந்த மார்ச் மாதத்தில் மாட்டிக்கொண்டது. இதனால் கடலின் போக்குவரத்து வெகுவாக பாதிப்படைந்தது. எனவே வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சூயஸ் கால்வாயில் Maersk Emerald என்ற சரக்கு கப்பலின் என்ஜினில் திடீரென்று பழுது ஏற்பட்டுள்ளது.

ஆனால், அந்த கப்பல் இழுவை கப்பல்களின் மூலமாக கப்பல்கள் காத்திருக்கக்கூடிய பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பழுது நீக்கும் பணிகள் உடனடியாக நடைபெற்றதாக சூயஸ் கால்வாயின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து கப்பல் மிதக்க வைக்கப்பட்ட பின்பு கால்வாய் போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியதாக கப்பல் நிறுவனம் Leth ஏஜென்சி கூறியுள்ளது.

Categories

Tech |