நெல்லையில் காவல்துறையினர் டிரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவின் 2 ஆவது அலையைத் தடுக்கும் பொருட்டு அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. இந்நிலையில் ஊரடங்கு விதியை மீறி வெளியே சுற்றித் திரியும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருவதோடு மட்டுமல்லாமல் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் காவல்துறையினர் ஊரடங்கு விதியை மீறி வெளியில் சுற்றித் திரியும் பொதுமக்களையும், மோட்டார் சைக்கிளில் சுற்றுபவர்களையும் டிரோன் மூலம் கண்காணித்துள்ளனர். இது மூலைக்கரைப்பட்டியினுடைய காவல்துறை சப்-இன்ஸ்பெக்டரான ஆழ்வார் தலைமையில் நடந்துள்ளது.