Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் போராட்டம் நடத்திய 6 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பெரியகுளத்தில் முத்துமனோ என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் விசாரணை கைதியாக பாளையங்கோட்டையிலிருக்கும் மத்திய சிறையில் இருந்தப்போது படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்தும், இதற்கு தொடர்புடைய சிறை அதிகாரிகளின் மீது கொலை சம்பவத்திற்கான வழக்குப்பதிவு செய்து, அவர்களை பதவி நீக்கம் செய்யவும் கோரிக்கை விடுத்து பரப்பாடியில் பொதுமக்கள் கருப்புக் கொடியை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக பழனி, முத்துப்பாண்டி, ஆரோக்கியராஜ் உட்பட 6 பேரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |