நெல்லையில் ஊரடங்கு விதியை மீறி பைக்கில் சுற்றி திரிந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்றின் பரவலை தடுக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல்துறையினர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது பழைய பேருந்து நிலையம் அருகே ஊரடங்கு விதியை மீறி அத்தியாவசிய தேவையின்றி பைக்கில் சுற்றித் திரிந்த ஆதி நாராயணன் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் சுற்றித்திரிவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.