நெல்லையில் 480 டன் அளவிலான காய்கறிகள் நடமாடும் வாகனங்களின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் விதமாக காய்கறிகளை வாகனங்களின் மூலம் விற்பனை செய்வதற்கு அரசாங்கம் உத்தரவிட்டது.
இதையொட்டி திருநெல்வேலி மாநகராட்சி சார்பாக 339 வாகனங்கள் காய்கறி விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் மாவட்டம் முழுவதுமாக 480 டன் அளவிலான காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதனை மாநகராட்சியின் ஆணையரான கண்ணன் அறிவித்துள்ளார்.