Categories
உலக செய்திகள்

கொரோனா தோற்றம் குறித்த ஆய்வு.. அமெரிக்காவுடன் இணைந்தது பிரிட்டன்..!!

கொரோனா வைரஸ் எங்கு தோன்றியது? என்பது தொடர்பில் விசாரணை நடத்தும் அமெரிக்காவிற்கு, பிரிட்டன் உளவுத்துறை உதவப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதா? என்று விசாரணை மேற்கொள்ளும் அமெரிக்காவிற்கு, பிரிட்டன் உளவுத்துறை உதவப்போவதாக Telegraph செய்தி வெளியிட்டிருக்கிறது.

பிரிட்டன் உளவுத்துறை அமைப்பானது தனியாக, கொரோனா எங்கு உருவாகியது? என்பது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து, ஒரு மூத்த Whitehall அதிகாரி கூறுகையில், கொரோனா உருவானது குறித்த விசாரணைக்கு ஹவானில் தங்களுக்கு இருக்கும் உளவுத்துறையை பயன்படுத்தியுள்ளோம். இதனுடன் அமெரிக்காவிற்கும் உதவவுள்ளோம் என்று கூறியதை குறிப்பிட்டு Telegraph செய்தி வெளியிட்டிருக்கிறது.

Categories

Tech |