ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக எண்ணி மற்றொருவரின் உடலை எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம்கர் என்ற நபர் அதிக அளவு குடிப்பழக்கத்திற்கு ஆளானதால், கல்லீரல் பாதிக்கப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை அவரது குடும்பத்தில் யாருக்கும் இந்த விஷயத்தை அவர் தெரியப்படுத்தவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தில் இருந்தவர்கள் ஓம்கரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதே நாளில் மற்றொரு நோயாளியும் அங்கு அனுமதித்தனர். இரண்டாவது அனுமதிக்கப்பட்ட நோயாளி சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலை யாரும் வாங்க முன் வராத காரணத்தினால் அவரது அடையாளத்தை மட்டும் மருத்துவமனை நிர்வாகம் தெரியப்படுத்தியது. இதை அறிந்த ஓம்கர் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்து எரியூட்டி உள்ளனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓம்கர் உடல்நிலை சரியாகி 7 நாட்களுக்குப்பின் திரும்ப வந்துள்ளார். இதை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதை எடுத்து விசாரணை செய்தபோது வேறு ஒருவர் உடலை எடுத்துவந்து இறுதி சடங்கு செய்தது தெரியவந்தது. ஆனால் இந்த சம்பவம் எதுவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓம்கருக்கு தெரியாது. அதன் பின்னர் அவரது உறவினர்கள் அனைவரும் அவரிடம் விஷயத்தை கூறினார்.