Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு ஜூன் 9ம் தேதி வரை நீட்டிப்பு… கேரள முதல்வர் அதிரடி…!!!

கேரள மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி வருகின்றது. மேலும் இந்து ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை சற்று குறைந்து கொண்டு வருவது மகிழ்ச்சியை அளிக்கின்றது.

ஆனால் கேரள மாநிலத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்துவதற்கு கேரளா மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மே 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கை ஜூன் 9 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.

Categories

Tech |