Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு…. பிடிவாரண்ட் பிறப்பித்த கோர்ட்…. தேசிய புலனாய்வு துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபரை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 7 பேரை தேசிய புலனாய்வுத் துறையினர் கைது செய்து இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக செயல்பட்டதாக கூறி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த கோவையை சேர்ந்த முகமது ஆசிக் என்பவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனால் சென்னை பூந்தமல்லி கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனையடுத்து தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் அவரை வலைவீசி தேடி வந்த நிலையில் முகமது ஆசிக் மயிலாடுதுறை மாவட்டத்தில் நீடூரில் பதுங்கி இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் இரவு தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் உதவியுடன் நீடூருக்கு சென்ற முகமது ஆசிக் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட முகமது ஆசிக்ஐ கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடூரில் ஒரு கோழி கடையில் வேலை பார்த்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவரைச் சென்னைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Categories

Tech |