நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கேரளா மாநிலத்தில் ஏற்கனவே மே-22 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கு ஜுன் 9ம் தேதி வரை நீட்டிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.