நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஊரடங்கு மே-31 வரை நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் ஜூன் 7ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் உத்தரவிட்டுள்ளார். மேலும் புதுச்சேரியில் ஊரடங்கால் கொரோனா பரவல் வேகம் குறைய தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.