எல்.இ.டி டி.வி-யை திருடிய குற்றத்திற்காக இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த எல்.இ.டி டி.வி-யை திருடிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனை அடுத்து காலையில் வசந்தகுமார் டி.வி திருடு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிவி-யை திருடிய குற்றத்திற்காக அப்பகுதியில் வசிக்கும் ஜமால் முகமது மற்றும் இரண்டு சிறுவர்களை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.