Categories
மாநில செய்திகள்

சமூக வலைத்தளங்களால் இது குறித்து…. வதந்தி பரப்பினால் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தளர்வுகளற்ற அற்ற கடுமையான ஊரடங்கை மே 31 வரை அமல்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து மேலும் ஜூன் 7 வரை நீட்டித்துள்ளது. கடந்த ஒருவார ஊரடங்கு காலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்

ஆனால் சமூக வலைதளங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்து தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கொரோனா வைரஸ் தொற்று, இறப்பு குறித்து சமூக வலைதளங்களில் தவறான வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |