டி20 போட்டிகளில் விராட் கோலியை விட ,தோனிதான் சிறந்த கேப்டனாக இருந்துள்ளார், என்று இங்கிலாந்தின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் கூறியுள்ளார்.
கடந்த 2007 ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக தோனி தலைமை ஏற்று, சிறப்பாக வழி நடத்தியிருந்தார். இவருக்குப் பின் , இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது . இந்நிலையில் இந்திய அணியில் தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவரின் யார் சிறந்த கேப்டனாக இருந்தனர் என்பது குறித்து ,இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “இந்திய அணியில் தோனி கேப்டனாக பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தினார் .
குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருவதற்கு தோனி முக்கிய காரணமாக இருக்கிறார். குறிப்பாக அவர் தலைமையில் இளம் வீரர்களை அணியில், இடம் பெறச் செய்து வலுவாக்கினார் “. விராட் கோலி குறித்து அவர் கூறும்போது,” இந்திய அணியின் விராட் கோலியும் சிறந்த கேப்டனாக திகழ்கிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அணியை சிறப்பாக வழி நடத்துவதால் இவரை டெஸ்ட் போட்டியில் சிறந்த கேப்டன் என்று கூறலாம். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தோனியே சிறந்த கேப்டன்” என்று அவர் கூறினார்.