திமுக பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் மனைவிபரமேஸ்வரி கடந்த 6 மாதங்களாகவே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராசா அண்ணனின் பொதுவாழ்வில் தோளோடு தோள் நின்ற அவரது மனைவியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அண்ணனுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல், ஆறுதல் என்று உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.